சமூக வலைதளமாக வாட்ஸ்அப்பில் பணப்பட்டுவாடா சேவை இன்னும் சில வாரங்களில் அதிகாரப் பூர்வமான தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பணம் அனுப்பும் சேவையை சோதனை ரீதியில் வாட்ஸ்அப் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
10 லட்சம் வாடிக்கையாளர்களின் கடந்த சில மாதங்களாக சோதனை ரீதியில் இந்த திட்டம் செயல்படுத்தி வருகிறது. வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்புவது எளிமையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக இதனை பயன்படுத்தி வருவர்கள் தெரிவிப்பதாக வாட்ஸ்அப் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு மற்றும் தேசியப் பணப்பட்டுவாடா நிறுவனம் பல்வேறு வங்கிகளுடன் இணைந்து பணப்பட்டுவாடா சேவையை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்க உள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக வாட்ஸ்அப்பின் பணப்பட்டுவாடா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் வழங்க உள்ள புதிய சேவை ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு உட்பட்டுள்ளதா? என ஆராய தேசியப் பணப்பட்டுவாடா நிறுவனத்தை மத்திய அரசு பணித்துள்ளது.
No comments:
Post a Comment