வெளிப்படுகிறதா தாடி பாலாஜியின் உண்மை முகம்? பிக்பாஸால் நிகழ்ந்த ஒரே நல்ல காரியம் - 1 Tech Tamil

Saturday, 23 June 2018

வெளிப்படுகிறதா தாடி பாலாஜியின் உண்மை முகம்? பிக்பாஸால் நிகழ்ந்த ஒரே நல்ல காரியம்


நடிகர் தாடி பாலாஜி, மனைவி நித்யாவுடனான குடும்ப பிரச்சனைகளினால் சினிமா துறையிலும் நிஜ வாழ்க்கையிலும் பயங்கரமாக பாதிக்கப்பட்டார். மேலும் அவரது மனைவியை சித்ரவதை செய்வது போன்ற காணொளிகளும் வெளியாகி ஒரு வில்லன் போன்ற தோற்றத்தை ரசிகர்களிடம் பெற்றிருந்தார்.

இதனால் படவாய்புகளும் இல்லாமல் போக, தற்பொழுது அவருக்கு கிடைத்திருக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பானது இழந்த நல்ல பெயரை மீண்டும் பெற வழிவகை செய்ய துவங்கி இருக்கிறது.

இவ்வளவு பிரச்சனைகளை நிகழ்ந்த பின்னரும், 'மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதனால் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்' எனக் கூறி இருந்தார் தாடி பாலாஜி. ஆனால் நித்யாவோ பணத்திற்காகத்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன் என தெளிவாக தெரிவித்து இருந்தார்.


இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்று வரும் பிரச்சனைகளில், நித்யாவின் விட்டுகொடுக்காத குணமானது தெளிவாக தெரியவந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் கூட, மும்தாஜ் மற்றும் மமதியுடன் வீண் பிடிவாதத்தால் சண்டை போடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

இதனால் பல லட்சம் பேர் பார்க்கும், நிகழ்ச்சியிலேயே இப்படி நடந்து கொள்கிறார் என்றால், இதே போல் தான் பாலாஜியுடன் வாழ்ந்த போதும் நடந்து கொண்டிருப்பார் என, பாலாஜிக்கு ஆதரவாக குரல் கொடுக்க துவங்கியுள்ளனர் ரசிகர்கள்.

No comments:

Post a Comment