விஜயை தொடர்ந்து சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் சஞ்சய்! - 1 Tech Tamil

Thursday, 21 June 2018

விஜயை தொடர்ந்து சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் சஞ்சய்!

விஜயை தொடர்ந்து சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் சஞ்சய்!

நடிகர் விஜய் சினிமா உலகில் எப்பேற்பட்ட உச்சத்தில் இருக்கிறார் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. நாளை வர இருக்கும் அவரது பிறந்தநாளை ஒரு திருவிழாவை போல ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் நடிகனாக அவர் அடைந்திருக்கும் வெற்றியை.
இந்நிலையில் இப்படிப் பட்ட உச்ச நட்சத்திரத்தின் வாரிசும் சினிமாவில் காலடி எடுத்து வைப்பது குறித்த தகவல் ஒன்று தற்பொழுது வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
நடிகர் விஜய்க்கு சஞ்சய், திவ்யா சாஷா என இரு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேசனல் பள்ளியில் படித்து வந்த நிலையில், சஞ்சய் பன்னிரெண்டாம் வகுப்பினை சமீபத்தில் நிறைவு செய்திருந்தார். அவர் பட்டம் பெற்ற காணொளிகள் கூட சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது

இப்படி இருக்க சஞ்சய் விரைவில் கனடா நாட்டிற்கு திரைப்பட உருவாக்கம் குறித்த மேற்படிப்பினை கற்க செல்ல இருக்கிறாராம். இதனால் S.A சந்திர சேகர், விஜய் ஆகியோரை தொடர்ந்து அடுத்த தலைமுறை வாரிசான சஞ்சயும் சினிமாவில் காலடி எடுத்து வைக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது

No comments:

Post a Comment