24-06-2018 - இன்றைய முக்கிய செய்திகள் - 1 Tech Tamil

Sunday 24 June 2018

24-06-2018 - இன்றைய முக்கிய செய்திகள்



ஜிம்பாப்வே அதிபர் எம்மெர்சன் ம்னன்கக்வா தலைமையில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில், துணை அதிபர், அரசியல்வாதிகள் உட்பட பலர் காயமடைந்தனர்.



சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி தொடரில், பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி, 4-0 என அபார வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் இந்தியா அர்ஜென்டினாவை சந்திக்கிறது.



சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. உலகின் கடைசி நாடாக சவுதி அரேபியா பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமையை வழங்கியுள்ளது.



ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்திய ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.கவினர் நேற்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 1,111 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


உலகக் கோப்பை கால்பந்து தொடரில், நேற்று பெல்ஜியம் துனிசியாவை 5-2 என வீழ்த்தியது. தென் கொரியாவுடன் மோதிய மெக்சிகோ 2-1 என வெற்றி பெற்ற நிலையில், ஜெர்மனி ஸ்வீடனை கடைசி நிமிடத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.


ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று லண்டனில் ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறுபடியும் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.


தென் கொரியாவுடன் சேர்ந்து நடத்தி வந்த ராணுவ பயிற்சி நடவடிக்கைகளை காலவரையின்றி நிறுத்த அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் ட்ரம்ப் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment