June 2018 - 1 Tech Tamil

Friday, 29 June 2018

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் #பயன்உள்ளதகவல்

June 29, 2018 0
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் #பயன்உள்ளதகவல்#

1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!

2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!

3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!

5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது  நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!

6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு  சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.

7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.

9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.

10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு   கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.

11. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

12. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.

13. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.

14. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.

15. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }

16. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

17. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!

அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?

 அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.

அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.

உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.

19. சீரக தண்ணீர்

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.

அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு....

நன்றி
Read More

Sunday, 24 June 2018

24-06-2018 - இன்றைய முக்கிய செய்திகள்

June 24, 2018 0


ஜிம்பாப்வே அதிபர் எம்மெர்சன் ம்னன்கக்வா தலைமையில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில், துணை அதிபர், அரசியல்வாதிகள் உட்பட பலர் காயமடைந்தனர்.



சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி தொடரில், பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி, 4-0 என அபார வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் இந்தியா அர்ஜென்டினாவை சந்திக்கிறது.



சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. உலகின் கடைசி நாடாக சவுதி அரேபியா பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமையை வழங்கியுள்ளது.



ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்திய ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.கவினர் நேற்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 1,111 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


உலகக் கோப்பை கால்பந்து தொடரில், நேற்று பெல்ஜியம் துனிசியாவை 5-2 என வீழ்த்தியது. தென் கொரியாவுடன் மோதிய மெக்சிகோ 2-1 என வெற்றி பெற்ற நிலையில், ஜெர்மனி ஸ்வீடனை கடைசி நிமிடத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.


ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று லண்டனில் ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறுபடியும் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.


தென் கொரியாவுடன் சேர்ந்து நடத்தி வந்த ராணுவ பயிற்சி நடவடிக்கைகளை காலவரையின்றி நிறுத்த அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் ட்ரம்ப் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Read More

Saturday, 23 June 2018

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த நான்கு போட்டியாளர்களால் அனைவருக்கும் ஏற்பட்ட இழப்பு..!

June 23, 2018 0
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த நான்கு போட்டியாளர்களால் அனைவருக்கும் ஏற்பட்ட இழப்பு..!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு நிகழ்ச்சியின் மீதான சுவாரஸ்யத்தை ஏற்படுத்த நிகழ்ச்சியாளர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


காரணம் பிக்பாஸ் முதல் சீசனை விட இரண்டாவது சீசன் மீது ரசிகர்களுக்கு சற்று சுவாரஸ்யம் குறைந்தே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த இரண்டாவது சீசனில் அதிகபடியான சண்டை சச்சரவுகள் இல்லாமல் உள்ளது.


நேற்றைய தினம் அனைத்து போட்டியாளர்களுக்கும், நீளம், மஞ்சள், ரோஸ் உள்ளிட்ட சில பேட்ச்கள் கொடுக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு டாஸ்க்கும் கொடுக்கப்பட்டது.
தலையில் முட்டை உடைப்பது, தண்ணீரில் தள்ளி விடுவது, குழந்தை போல் நடந்துக்கொள்வது, ரவுடி போல் நடந்துக்கொள்வது, வெங்காயம் உரிப்பது என பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு சில டாஸ்க் கொடுத்தார், போட்டியாளர்கள் இந்த டாஸ்க் முடியும் வரை அதே கதாபாத்திரத்தில் நடந்துக்கொள்ள வேண்டும் என்பது தான் விதிமுறை.


ஆனால், ரம்யா, பாலாஜி, வைஷ்ணவி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் கொடுக்கப்பட்ட இந்த டாஸ்க்கை சரியாக செய்து முடிக்காததால், பிக் பாஸ் கொடுத்த 1000 பாயிட்ஸில் இருந்து 400 பாயிட்ஸ் குறைந்தது.


பிக்பாஸ் வீட்டில் உள்ள 16 போட்டியாளர்களில் 12 பேர் அவரவர் டாஸ்கை சரியாக செய்த போதிலும் இந்த நான்கு பேரால் அனைவர்க்கும் பாயிட்ஸ் இழப்பு ஏற்பட்டது. எனினும் அனைவரும் பரவாயில்லை என கூறி இதை பெரிதாகஎடுத்துக்கொள்ளாதது அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதை காட்டுகிறது என சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Read More

இதற்காகவே ஆசிஃபாவை துடிக்க துடிக்க கொன்றேன் ! குற்றவாளியின் "கொடூர" வாக்குமூலம்

June 23, 2018 0
இதற்காகவே ஆசிஃபாவை துடிக்க துடிக்க கொன்றேன் ! குற்றவாளியின் "கொடூர" வாக்குமூலம்


ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கிய ஒரு விஷயம் என்றால் அது சிறுமி ஆசிஃபா படுகொலை செய்யப்பட்டது தான்.


ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ஆசிஃபா என்ற 8 ‌வயதுச் சிறுமி கடந்த ஜனவரி 10ஆம் தேதி காணாமல் போனார். ஒரு வாரத்திற்குப் பிறகு ராஸன்னா வனப்பகுதியில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்தச் சிறுமியை ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து வழிபாட்டுத்தலம் ஒன்றில், மறைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது கண்டுப் பிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கு இந்திய அளவில் கண்டனக் குரல்கள் எழுந்தன. பலரும் சமூக வலைத்தளங்களில் ஆசிஃபாக்கு நீதி வேண்டும் என பதிவிட்டனர்.


இந்நிலையில், ஆசிஃபா கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் முக்கியக் குற்றவாளியின் வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது.
இவ்வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி கூறுகையில், முஸ்லிம் சமுதாய மக்களை மிரட்டவே, சிறுமி ஆசிஃபாவை கடத்தி வந்து அடைத்து வைத்துள்ளார் சஞ்சி ராம்.
ஆனால், அச்சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதும், அந்த குற்றத்தில் தனது மகனுக்கும் தொடர்பிருப்பதை அறிந்த பிறகே, மகனைக் காப்பாற்ற சிறுமியைக் கொலை செய்ய முடிவெடுத்ததாக விசாரணையின் போது கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
கதுவா சிறுமி வழக்கில், சஞ்சி ராம், அவரது மகன் விஷால், மற்ற 5 பேர் மற்றும் ஒரு சிறார் ஆகிய 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சிறுமி கடந்த 10ம் தேதி கடத்தப்பட்டுள்ளார். அன்றைய தினமே ராமின் உறவுக்கார பையனான சிறார் குற்றவாளி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
சிறுமி 10ம் தேதி கடத்தி வரப்பட்ட நிலையில், 13ம் தேதி தான் அவர் பலாத்காரத்துக்கு உள்ளான விஷயம் தனக்கு தெரிய வந்ததாகவும், உறவுக்கார பையன் தான் அதனை ஒப்புக் கொண்டதாகவும் சஞ்சி ராம் கூறியுள்ளார்.


இந்த பலாத்காரத்தில் தனது மகனுக்கும் தொடர்பிருப்பதால், அவனைக்காப்பாற்றவே அசிபியாவை கொலை செய்ய முடிவெடுத்ததாகவும், முஸ்லிம் பக்கர்வால் மக்களை மிரட்ட நினைத்த தனது திட்டமும் இதன் மூலம் நிறைவேறும் என்று கூறியுள்ளார்.
ஜனவரி 14ம் தேதி சிறுமியைக் கொலை செய்து, எந்த தடயமும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் நினைத்துள்ளார்.
ஆனால், அவர் நினைத்தபடி திட்டம் நிறைவேறவில்லை. பிறகுதான், ஒரு வாகனத்தில் ஏற்றி கதுவா சிறுமியின் உடல் ஹிராநகர் கால்வாய்க்கு அருகே வீசப்பட்டுள்ளது. இந்த கடத்தலுக்கான திட்டம் ஜனவரி 7ம் தேதியே தீட்டப்பட்டு, அதற்கான போதைப் பொருட்களும் வாங்கிவைக்கப்பட்டுள்ளது.
கதுவா சிறுமியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த போது, தனது மகன் பிடிபட்டு விடக் கூடாது என்பதற்காக, சிறார் குற்றவாளியை, குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படியும், விரைவில் அவரை விடுதலை செய்ய வைப்பதாகவும் சஞ்ஜி ராம் கூறியுள்ளார். இதையடுத்தே அச்சிறுவன் குற்றத்தை காவல்நிலையத்தில் சென்று ஒப்புக் கொண்டுள்ளான்.
Read More

வெளிப்படுகிறதா தாடி பாலாஜியின் உண்மை முகம்? பிக்பாஸால் நிகழ்ந்த ஒரே நல்ல காரியம்

June 23, 2018 0

நடிகர் தாடி பாலாஜி, மனைவி நித்யாவுடனான குடும்ப பிரச்சனைகளினால் சினிமா துறையிலும் நிஜ வாழ்க்கையிலும் பயங்கரமாக பாதிக்கப்பட்டார். மேலும் அவரது மனைவியை சித்ரவதை செய்வது போன்ற காணொளிகளும் வெளியாகி ஒரு வில்லன் போன்ற தோற்றத்தை ரசிகர்களிடம் பெற்றிருந்தார்.

இதனால் படவாய்புகளும் இல்லாமல் போக, தற்பொழுது அவருக்கு கிடைத்திருக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பானது இழந்த நல்ல பெயரை மீண்டும் பெற வழிவகை செய்ய துவங்கி இருக்கிறது.

இவ்வளவு பிரச்சனைகளை நிகழ்ந்த பின்னரும், 'மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதனால் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்' எனக் கூறி இருந்தார் தாடி பாலாஜி. ஆனால் நித்யாவோ பணத்திற்காகத்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன் என தெளிவாக தெரிவித்து இருந்தார்.


இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்று வரும் பிரச்சனைகளில், நித்யாவின் விட்டுகொடுக்காத குணமானது தெளிவாக தெரியவந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் கூட, மும்தாஜ் மற்றும் மமதியுடன் வீண் பிடிவாதத்தால் சண்டை போடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

இதனால் பல லட்சம் பேர் பார்க்கும், நிகழ்ச்சியிலேயே இப்படி நடந்து கொள்கிறார் என்றால், இதே போல் தான் பாலாஜியுடன் வாழ்ந்த போதும் நடந்து கொண்டிருப்பார் என, பாலாஜிக்கு ஆதரவாக குரல் கொடுக்க துவங்கியுள்ளனர் ரசிகர்கள்.
Read More

Friday, 22 June 2018

6ஜிபி ரேம், 13+8 எம்பி ஏஐ கேமரா உடன் ஒப்போ ரியல்மீ 1 வெறும் ரூ.8,990/ முதல்.

June 22, 2018 0

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன ஒப்போ, இன்று அதன் துணை பிராண்ட் ஆன ரியல்மீ (Realme) வரிசையின் கீழ், ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மீ 1 என்கிற (Realme 1) பெயரைக்கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. குறிப்பாக அதன் வடிவமைப்பை பார்த்தல், இது ஒரு சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்பதை யாருமே நம்ப மாட்டார்கள். ரியல்மீ 1 ஸ்மார்ட்போனின் வெளியீடானது, ரூ.15,000/-க்குள் கிடைக்கும் அத்துணை ஸ்மார்ட்போன்களையும் ஒரு வழி செய்து விடும் என்பது போன்றே தெரிகிறது. அதன் அம்சங்கள் என்ன.? விலை நிர்ணயம் என்ன.? என்பதை பற்றி விரிவாக காண்போம்.



டிஸ்பிளே.! அம்சங்களை பொறுத்தவரை, ரியல்மீ 1 ஆனது, 12-அடுக்கு நானோடெக் மெட்டீரியல் மூலம் செய்யப்பட்ட ஒரு பளபளப்பான மேற்பரப்பை கொண்ட டயமண்ட் பிளாக் பூச்சு கொண்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு 6 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. மீடியா டெக் ஹெலியோ பி60 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜி ஆதரவையும் கொண்டுள்ளது.


128 ஜிபி வரை.! 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு கொண்ட 6 ஜிபி ரேம் போன்ற மூன்று சேமிப்பு மாடல்களில் வெளியாகியுள்ளது. மூன்றிலுமே, 128 ஜிபி வரை சேமிப்பக விரிவாக்கத்திற்காக ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. ரியல்மீ 1 ஆனது, ரெட்மீ நோட் 5 ப்ரோ மற்றும் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 போன்ற ஸ்மார்ட்போன்களை பின்னுக்குத்தள்ளும் வண்ணம் (செயல்திறன் அடிப்படையில்), ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.
Read More

Thursday, 21 June 2018

என்னை ஆசிரியராகப் பார்க்கவில்லை; அண்ணனாகப் பார்த்தார்கள்' - ஆசிரியர் பகவான் உருக்கமான பேட்டி!

June 21, 2018 0

தமிழகம் முழுவதும் இன்று ஓர் ஆசிரியரைப் பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் கடைசி எல்லை பகுதியான வெளியகரம். இது திருவள்ளூர் மாவட்டத்தின் tகடைசி எல்லை பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமம். இந்தக் குக்கிராமத்தில் தெலுங்குதான் தாய் மொழி. இந்த ஊரில் 280 மாணவர்கள் படிக்கும் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆங்கில ஆசிரியராகப் பள்ளிப்பட்டு அடுத்த பொம்ம ராஜிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த எம்.ஏ பி.எட் படித்த 28 வயதான இளைஞன் கோபிந்த் பகவான் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணிக்குச் சேர்ந்தார். பணியில் சேர்ந்த நாள் முதல் மாணவர்களிடம் ஆசிரியராக இல்லாமல் பள்ளித் தோழனாகவே பாடம் நடத்தி வந்தார். ஆங்கிலப் பாடத்தில் அதிக நாட்டம் இல்லாத மாணவர்கள் ஆசிரியர் பகவான் பாடம் நடத்தும் முறையைக் கண்டு வியந்து ஆர்வத்துடன் படித்தனர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் ஆசிரியரின் ஆங்கிலப் பாடம் கற்றுத்தரும் முறையைக் கண்டு ஆர்வமுடன் படித்தனர்.


இந்நிலையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் நடந்தது. அதில் ஆங்கில ஆசிரியர் பகவானுக்கு திருத்தணி அருகில் உள்ள அருங்குளத்துக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது .நேற்று முன்தினம் பள்ளிக்கு வராத பகவான் உத்தரவை வாங்க அலுவலகம் சென்றிருந்தார். ஆசிரியர் வராததைக் கண்டு மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர்கள் பள்ளியை அணுகிக் கேட்டபோது பகவானுக்கு டிரான்ஸ்ஃபர் கிடைத்தது தெரியவந்தது. இதைக் கண்டித்து நேற்று மதியம் மாணவர்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பள்ளியையும் பூட்டினர். தங்கள் நண்பனாக விளங்குகிற ஆசிரியர் பகவானை இடமாற்றம் செய்யக் கூடாது என்று மாணவர்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.

அந்த நேரம் பார்த்து பள்ளிக்கு வந்த பகவானை மாணவர்கள் கட்டிப்பிடித்து அழுதனர். ஆசிரியரை மாற்றக் கூடாது என்று தலைமையாசிரியர் அரவிந்த்திடம் மாணவர்களின் பெற்றோர்கள் முறையிட்டனர். அதைத் தொடர்ந்து இடமாறுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் பகவானிடம் நாம் பேசினோம், ``மாணவர்களிடம் நான் ஆசிரியராக ஒருபோதும் நடந்து கொண்டதில்லை. மாணவர்களுடைய எண்ணத்துக்கு ஏற்றாற்போல் பாடம் நடத்துவேன். போரடிக்கிறது என்று சொன்னால் அவர்களுக்குக் கதை சொல்வேன். யாரையும் நான் கண்டிக்க மாட்டேன். யாரையும் அடிக்கவும் மாட்டேன். மாணவர்களுடைய பிறந்தநாள் அல்லது உடல் நலம் சரியில்லாதபோது மாணவர்களுக்குத் தன்னுடைய சொந்த செலவிலேயே அனைத்து உதவிகளையும் செய்து தருவேன். அது தவிர மாணவர்களுக்கு எது தேவையாக இருந்தாலும் என்னிடம் கேட்பார்கள். நான் அவர்களுக்கு அதை வாங்கித் தருவேன்.
மேலும் கூறுகையில், ``எனக்கும் இந்தப் பள்ளியைவிட்டு வெளியேற ஆசையில்லை. எங்கு சென்றாலும் மாணவர்களின் நலனுக்காகப் பாடுபடுவேன்" எனக்கூறினார்

Read More

விஜயை தொடர்ந்து சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் சஞ்சய்!

June 21, 2018 0
விஜயை தொடர்ந்து சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் சஞ்சய்!

நடிகர் விஜய் சினிமா உலகில் எப்பேற்பட்ட உச்சத்தில் இருக்கிறார் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. நாளை வர இருக்கும் அவரது பிறந்தநாளை ஒரு திருவிழாவை போல ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் நடிகனாக அவர் அடைந்திருக்கும் வெற்றியை.
இந்நிலையில் இப்படிப் பட்ட உச்ச நட்சத்திரத்தின் வாரிசும் சினிமாவில் காலடி எடுத்து வைப்பது குறித்த தகவல் ஒன்று தற்பொழுது வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
நடிகர் விஜய்க்கு சஞ்சய், திவ்யா சாஷா என இரு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேசனல் பள்ளியில் படித்து வந்த நிலையில், சஞ்சய் பன்னிரெண்டாம் வகுப்பினை சமீபத்தில் நிறைவு செய்திருந்தார். அவர் பட்டம் பெற்ற காணொளிகள் கூட சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது

இப்படி இருக்க சஞ்சய் விரைவில் கனடா நாட்டிற்கு திரைப்பட உருவாக்கம் குறித்த மேற்படிப்பினை கற்க செல்ல இருக்கிறாராம். இதனால் S.A சந்திர சேகர், விஜய் ஆகியோரை தொடர்ந்து அடுத்த தலைமுறை வாரிசான சஞ்சயும் சினிமாவில் காலடி எடுத்து வைக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது
Read More

நீங்கள் எப்போது இறப்பீர்கள்? - துல்லியமாக கணிக்கும் கூகுள் !

June 21, 2018 0
நீங்கள் எப்போது இறப்பீர்கள்? - துல்லியமாக கணிக்கும் கூகுள் !




மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் எப்போது இறப்பார்கள் என்பதை கணிக்கும் தொழில்நுட்பத்தை கூகுள் உருவாக்கியுள்ளது.
கூகுள் இல்லாத வாழ்க்கையை இன்று நினைத்துக் கூட பார்க்க முடியாது. கூகுளில் அத்தனை தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஜிமெயில், மேப் என தன்னுடைய தொழில்நுட்பத்தால் கோடிக் கணக்கானவர்களை கூகுள் கட்டிப்போட்டுள்ளது. 117 கோடி வாடிக்கையாளர்கள் கூகுள் நிறுவனத்திற்கு உள்ளார்.
பல்வேறு தகவல்களை அளிக்கும் கூகுள், இப்படி ஒரு தகவலையும் அளிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கூகுள் நிறுவனத்தின் மருத்துவ அறிவுக் குழு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கு எவ்வளவு சாத்தியம் உள்ளது என்பதை கணிக்க செயற்கை நுண்ணறிவு கணித செயல்முறையை உருவாக்கியுள்ளது.


கூகுள் உருவாக்கியுள்ள அந்த டூல் மூலமாக மருத்துவமனையில் உள்ள நோயாகிகள் எவ்வளவு காலம் உயிரோடு இருக்க முடியும், திரும்பவும் நோயாளி எப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார், எவ்வளவு நாட்கள் அவர்கள் மருத்துவமனையில் இருக்க முடியும் என்பது போன்ற தகவல்களை கணிக்க முடியும்.
இதற்காக கூகுள் நிறுவனம் என்ன செய்துள்ளது என்றால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் குறித்து அனைத்து தகவல்களை அந்த டூலில் பதிவு செய்து கொள்கிறது. தனிப்பட்ட ஒரு நபர் இதுபோல் அவரது முழு மருத்துவ குறிப்புகளை, தகவல்களை தொகுத்து வைத்துக் கொள்வது சிரமம். ஆனால், அந்த வேலையை கூகுள் செய்கிறது. சேகரித்து வைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் ஒரு நோயாளி இறப்பை மருத்துவர்களை விட கூகுள் துல்லியமாக கணிக்கிறது.


இரண்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் மரணத்தை எப்படி முன் கூட்டியே கூகுள் கணிக்கிறது என்பது குறித்து பிரிட்டனில் இருந்து வெளியாகும் தி நேச்சுரல் என்ற இதழ் கடந்த மாதம் செய்தி வெளியிட்டது. இந்தச் செய்தியில் முதல் மருத்துவமனையில் 95 சதவீதமும், இரண்டாவது மருத்துவமனையில் 93 சதவீதமும் கூகுள் சரியாக இறப்பை கணிப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட ஆய்வில், மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இறப்பதற்கு 9.3 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக மருத்துவமனை கணித்தது. ஆனால், கூகுள் டூலானது அந்தப் பெண் இறப்பது 19.9 சதவீதம் வாய்ப்புள்ளதாக கணித்தது. மருத்துவமனையில் அந்தப் பெண் குறித்து உள்ள 1,75,639 தகவல்களின் அடிப்படையில் இதனை கூகுள் கணித்தது. அந்தப் பெண் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இறந்துவிட்டார்.


அதேபோல், நோயின் அறிகுறிகள், நோய் உருவாதல் குறித்து துல்லியமாக அறிந்து கொள்ளவும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் ஈடுபட்டுள்ளது
Read More

"8 வழிச்சாலையை பிரேசில் போல் அமையுங்களேன்..." விவேக் வேண்டுகோள்!

June 21, 2018 0

சேலம் - சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், பிரேசில்போல் மாற்று ஏற்பாட்டில் பாலமாக போட இயலுமா? என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் - சென்னை இடையே கண்டிப்பாக பசுமை வழிச்சாலை அமைந்தே தீரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 8 வழிப்பாதையாக பசுமை வழிச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய - மாநில அரசுகள் களமிறங்கியுள்ளன.
தாம்பரம், திருவண்ணாமலை, அரூர் வழியாக இந்த புதிய சாலை அமைகிறது. தற்போது சேலம் செல்ல 4 வழிச்சாலைகள் உள்ளன. இவை 330 கிலோ மீட்டர் தூரம் கொண்டவை.
ஆனால் பசுமை வழிச்சாலையின் தூரம் 274 கிலோ மீட்டராக குறையும். அதே போல் பயண நேரமும் வெகுவாக குறையும். தற்போது சுமார் 7 மணி நேரம் ஆகிறது. பசுமை வழிச்சாலை அமைந்தால் பயண நேரம் 3 மணி நேரமாக குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை அமைத்தால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கும். கிராமங்களும் பாதிக்கும் என்பதால் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
இந்த வழித்தடத்தில் உள்ள 8 மலைகளை உடைத்தும் 3 இடங்களில் மலைகளை குடைந்து குகை வழியாகவும் சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால் இயற்கை வளங்கள் அழியும் என்று விவசாயிகள், பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் என பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், தேசக்கட்டுமானம் முக்கியம்தான். ஆனால் காடுகள், வயல்கள் அழிவது மக்களுக்கும் விவசாயத்துக்கும் பெரும் அபாயம் அல்லவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரேசில் போல் மாற்று ஏற்பாட்டில் பாலமாக போட இயலுமா? எஎன்றும், இது குறித்து பொறியியல் வல்லுனர்கள் சிந்திக்க வேண்டுகிறேன் என்றும் விவேக் பதிவிட்டுள்ளார்.
Read More

Wednesday, 20 June 2018

திருச்சி செல்லும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக இதை பயன்படுத்தி கொள்ளலாம்

June 20, 2018 0
திருச்சி செல்லும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக இதை பயன்படுத்தி கொள்ளலாம்

சமயபுரத்தில் திண்டுகலார் வணிக வளாகம், சென்னை மெயின் ரோடு, நான்கு ரோடு அருகில் மக்கள் மெடிக்கல் திறக்கப்பட்டுள்ளது இங்கு மருந்து 70% தள்ளுபடி விலையில் கிடைக்கும் இது ஒரு மத்திய அரசாங்க நிறுவனம் 300 மதிப்புள்ள மருந்து 79 ரூபாய் மட்டுமே அனைவரும் பயன் பெறுங்கள் மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள் மக்கள் மருந்தகம்

இங்கு தரமான ஆங்கில மருந்துகள் குறைவான விலையில் கிடைக்கும்.

(எ.கா) மற்ற மெடிக்கல்களில்
ரூ.1500க்கு வாங்கும் மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் ரூ.300 மட்டுமே வரும்.

சர்க்கரை, இரத்தஅழுத்தம்,
இருதயம்,கொழுப்பு, அலர்ஜி, போன்ற
நோய்களுக்கு அதிக அளவில் மருந்துகள் உள்ளன.

தங்களுக்குத் தேவையான மருந்துகள் விபரங்களை
வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தால் தங்களுக்கு கூரியரில் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும்.

தொடர்புக்கு:
மக்கள் மருந்தகம், நெ. 15 /5  திண்டுகலார் வணிக வளாகம், சென்னை மெயின் ரோடு, 4 ரோடு, சமயபுரம் - 621112.
செல்: 8778306117 / WatsUp No: 6381404182

மக்களை அழிக்கும் பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கின்றது.
ஆனால் உயிரை காக்கும் மருந்துகள் விலை அதிகமாக உள்ளது.
இதை மாற்றவே
மக்கள் மருந்தகங்கள்.

அனைவருக்கும் பயன்படுமாறு இப்பதிவை மற்ற நண்பர்களுக்கும்
SHARE பகிர்ந்து அனைத்து தரப்பினர்க்கும் சென்றடைய உதவுங்கள் 🙏

Now We Opened Our First GENERIC MEDICAL SHOP in Samayapuram
மக்கள் மருந்தகம், நெ. 15 /5  திண்டுகலார் வணிக வளாகம், சென்னை மெயின் ரோடு, 4 ரோடு, சமயபுரம் - 621112.

சமயபுரத்தில் மக்களுக்கு உண்ணத நோக்கத்துடன் தரமான மருந்துகள் மிக குறைந்த விலையில் மத்திய அரசு அனுமதியுடன்  JAN AUSHADHI MEDICAL STORE  Generic Medical Shop துவங்கியுள்ளோம். இதை சமயபுரத்தில் மக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்   அணைத்து வகையான ஆங்கில  மருந்துகளும் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும் .

உதாரணமாக :
இதய நோயாளிகளுக்கு :
மாதம் : ரூ.1500 மருந்து வாங்குபவர்களுக்கு
நம் மத்திய அரசு மருந்தகத்தில்
ரூ:150 மட்டுமே ஆகும்..

மருந்துக்கு தொடர்பு: 8778306117

மிகவும் முக்கியம்......

அனைவரும் கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது.பொதுவாக டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது அதில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால் அதிக விலை உள்ள மாத்திரைகளையே (அது குறைவாக கிடைக்கும் என்ற போதும் ) அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

மருந்து விலைப் பட்டியல் பற்றி அறிய கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின்பற்றவும்.........

(1) "1MG Health App For India" என்பதை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்யவும்.

(2) மருந்து பெயரை தேடவும்...........

(3) பயன்படுத்தும் மருந்து தேடவும்.

(உதாரணம்...லிரிகா 75 மில்லி கிராம்) (பிபிசர் கம்பெனி).......

(4) கம்பெனி பெயர், மருந்து பெயர், விலை,கலந்துள்ள வேதிப் பொருட்கள் முதலிய விபரம் பற்றி அறியலாம்.

(5) Substitute என்பதை க்ளிக் செய்யவும்.......

(6) அதே மருந்துகள் மிக குறைந்த விலையிலும் கிடைப்பதை அறிந்து ஆச்சரியப் படுவீர்கள்.....

(உதாரணம்.லிரிகா என்ற மருந்து பதினான்கு மாத்திரை 768.56 ரூபாய்க்கு கிடைக்கிறது.

ஒரு மாத்திரை ரூ.54.89. ஆனால் அதே மாத்திரை Prebaxe என்ற பெயரில் சிப்லா என்ற கம்பெனி பத்து மாத்திரை 59 ரூபாய்க்கு தருகிறது.

ஒரு மாத்திரை ரூ.5.90 மட்டுமே......
EX
1 GLYCOMET GP 1. - 10 மாத்திரை  விலை ₹7
2 GLYCOMET GP 2  -10 மாத்திரை  விலை  ₹12
3 GEMER  2       - 10 மாத்திரை  விலை  ₹12
4 ATORVA 10.    -10 மாத்திரை  விலை ₹5
5 ATORVA 20.    - 10 மாத்திரை  விலை ₹10
6 GLYCINORM M80- 15மாத்திரை  விலை ₹32
7 GULCORED FORT -10 மாத்திரை  விலை ₹11
8 PAN D     -10 மாத்திரை  விலை ₹19
9 SHELCAL- 10 மாத்திரை  விலை₹4
10 ATORLIP F- 15மாத்திரை  விலை₹30
11

சுப்ரீம் கோர்ட் தலையிட்டு கவனம் செலுத்தி வருகிறது.........

உயிர் காக்கும் மருந்துகளை கிடைக்காமல் செயவதில் கம்பெனிகள் அக்கறை காட்டுகின்றன.

ஆனால் சாமானியனின் மருத்துவ தேவையை கவனத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் செயல்படுகிறது......

அன்புக்கு விலை இல்லை.....மற்ற குருப்பில் பதிவிடவும்.....
மற்றவர்க்கு உதவுவதே உருப்படியான காரியம்...
Read More

வேடிக்கை பார்க்க வந்த இடத்தில் நடிகனான யோகிபாபு! வாழ்வை திருப்பி போட்ட அந்த தருணம்

June 20, 2018 0


முன்னணி காமெடி நடிகர்கள் அனைவரையும் நாயகனாகிவிட்ட நிலையில், நடிகர் யோகிபாபு தான் இப்போது டாப்பில் இருக்கிறார். விஜய், அஜித் என்று முன்னணி நாயகர்களோடு நடிக்கும் அளவுக்கு வளர்ந்து வரும் இவர், சினிமா துறைக்கு எப்படி வந்தார் என்றுதே ஒரு சுவாரஸ்யமான கதைதான்.

யோகிபாபு திரைப்படங்களில் நடிக்கும் முன், தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான 'லொள்ளு சபா' நிகழ்ச்சியில் ஜூனியர் ஆர்டிஸ்டாக்தான் முதன் முதலில் நடிக்க துவங்கி இருந்தார்.

சந்தானம் போன்ற பல சினிமா நடிகர்கள் உருவாக்கியுள்ளனர் என்று நிகழ்ச்சி, யோகிபாபுவின் நண்பர்தான் முதலில் ஜூனியர் ஆர்டிஸ்டாக பணி புரிந்து வருகிறார். ஒருமுறை அவருக்கு கம்பெனி கொடுக்க ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றிருந்தாராம் யோகிபாபு.


மூன்றாம் படக் குறிப்பு
அவருடைய வித்யாசமான தோற்றத்தையும் குரலையும் பார்த்து, அந்தநிகோதின் இயக்குனரான ராம்பாலா, அவரை நடிக்க அளித்திருக்கிறார். ஆரம்பத்தில் தயங்கினாலும், பின்னர் ஒப்புக்கொண்டது நடித்த யோகிபாபு அந்தநிகற்ற் துணை இயக்குனராகவும் பணியாற்றி இருந்தாராம்.


மூன்றாம் படக் குறிப்பு
அந்தநிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வாய்ப்பில், அமீரின் ராம் படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருந்த யோகிபாபு.
Read More

Tuesday, 19 June 2018

எஸ்.வி.சேகர் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்!

June 19, 2018 0
நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி இழிவான கருத்தைப் பதிவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாவிட்டால் பிடி ஆணை பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி எச்சரிக்கை தெரிவித்துள்ளார். தலைமறைவாக இருந்துவரும் எஸ்.வி.சேகர் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
Read More

இளம் வீரரிடம் மன்னிப்பு கேட்ட பாண்டியா

June 19, 2018 0

பெங்களூருக்கு எதிராக போட்டியில் பந்து தாக்கி காயமடைந்த மும்பை வீரர் இஷான் கிஷனுக்கு மன்னிப்பு கேட்டார் ஹர்திக் பாண்டியா.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், மும்பை அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி மும்பை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணியில் 20 ஓவர் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் 13 வது ஓவர் ஹார்டிக் பாண்டியா பீல்டிங் செய்து தூக்கி எறிந்த பந்து, மும்பை அணியின் வீக்கெட் கீப்பர் இஷான் கிஷனின் முகத்தை பதம் பார்த்தது. இதனையடுத்து, அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.



இது வருத்தம் தெரிவிக்க ஹர்த்திக் பாண்டியா தனது டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டார்.
Read More

மனிதனின் இரத்த வகைகளில் மிக அரிதான இரத்தவகை எது தெரியுமா..?!

June 19, 2018 0

கடந்த 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் இரத்த தானம் செய்ய உலகெமெங்கும் உள்ள மக்கள் தானாக முன் வருவதில்லை, இரத்த தானம் பற்றிய பல மூட நம்பிக்கைகள் இன்று அளவு கூட மக்களிடையே ஒரு வித பயம் இருந்து வருகிறது.
இருப்பினும், முறையான விழிப்புணர்வு காரணமாக சமீப காலமாக போதுமான அளவுக்கு மருத்துவமனைகளில் இரத்தம் கிடைத்து வருகிறது. உலகில் கிடைக்க பெறும் இரத்தங்களில் பெரும் பங்கு, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுடையது என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
மனிதனுக்கு மொத்தம் 08 வகையான இரத்த வகைகள் உள்ளது. இவற்றில் மிகவும் அரிதான இரத்தவகைகளை கீழ்கண்ட பட்டியலில் பார்க்கலாம்.
* ஓ = பாசிட்டிவ் - 38%,
* ஓ = நெகட்டிவ் - 7%,
* ஏ = பாசிட்டிவ் - 34%,
* ஏ = நெகட்டிவ் - 6 %,
* பி = பாசிட்டிவ் - 9%,
* பி = பாசிட்டிவ் - 2%,
* ஏபி = பாசிட்டிவ் - 2 %,
* ஏபி = நெகட்டிவ் - 1%.

இந்த அட்டவணையின் படி ஏபி - நெகட்டிவ், பி = பாசிட்டிவ், பி = பாசிட்டிவ், இரத்தவகைகள் தான் மிகவும் அரிதான இரத்த வகை எனவே, இந்த செய்தியை படிப்பவர்கள் ஏபி - நெகட்டிவ் இரத்த வகையினை கொண்டிருந்தாள், மிகவும் கவனமாக உங்கள் வாழக்கையில் செயல்படுங்கள், உங்களுக்கு விபத்துகள் ஏற்பட்டால் இரத்தம் கிடைப்பது மிக அரிதான ஒரு விடயம் என்பதால் மிகவும் கவனமாக இருங்கள்.
Read More

பட்ஜட் விலையில் இரண்டு Smartphones; Honor அதிரடி சலுகை!

June 19, 2018 0
Huawei நிறுவனம் மலிவு விலை போனான Honor மொபெல் தனது அடுத்த வருவாய் Honor 7A மற்றும்

Honor 7C இரு ஸ்மார்ட்போன்களை வளியிட்டுள்ளது!

7C ஆனது இரண்டு வகைப்பாட்டில் வருகிறது ...
3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி நினைவக திறன் கொண்டவருகிறது Honor 7C விலை ரூ 9,999.
4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி நினைவக திறன் கொண்டுவரும் ஆணையாளர் 7C விலை ரூ .11,999.
அதேவேளையில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி நினைவக திறன் கொண்டவருடன் 7A- ஆனது ரூ .8,999 க்கு Flipkart- ல் கிடைக்கும் அறிவிப்பு உள்ளது.

7A சிறப்பம்சங்கள்

5.7 "HD + தொடுதிரை.
ஸ்னாப் 430 செயலி.
3 ஜிபி ரேம், 32 ஜிபி உள் நினைவகம்
13MP + 2MP இரு பின் கேமரா
8MP முன் கேமரா.
3000mAh பேட்டரி,
கைரேகை ஸ்கேனர்.

7C சிறப்பம்சங்கள்

5.9 "HD + தொடுதிரை.
ஸ்னாப் 430 செயலி.
3 ஜிபி ரேம், 32 ஜிபி உள் நினைவகம் (அ) 6 ஜிபி ரேம், 64 ஜிபி உள் நினைவகம்
13MP + 2MP இரு பின் கேமரா.
8MP முன் கேமரா.
3000mAh பேட்டரி,
கைரேகை ஸ்கேனர்.
Read More

ஆத்தாடி அம்பானி மகனின் திருமண அழைப்பிதழ் விலை இவ்வளவா!!!!!

June 19, 2018 0

இந்தியாவின் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் மகன், ஆகாஷ் அம்பானி தனது பள்ளித் தோழியான பிரபல வைர வியாபாரி ரஸல் மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தாவை விரைவில் திருமணம் செய்யவுள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானி மகனின் கல்யாணத்திற்கு பிரமாண்டமாக வடிவமைத்துள்ள திருமண அழைப்பிதழை கோவிலில் வைத்து சாமி தரிசனம் செய்துள்ளார்.
அப்போது அவர் திருமண அழைப்பிதழை வெளியே எடுத்த போது அனைவரும் வாயை பிளந்தனர். அந்த திருமண அழைப்பிதழே மினி கோவிலை போல் இருந்துள்ளது. ஏனெனில் அந்த அழைப்பிதழின் உள்ளே விநாயகர் சிலையும், அதன் உள்ளே இருக்கும் பெட்டியை திறக்கும் போது கோவிலில் கேட்பது போல மணியோசையும் கேட்டுள்ளது.
அதன் மேல் விலையுர்ந்த சில கற்களும் பொருத்தப்பட்டுள்ளன. திருமண அழைப்பிதழை திறந்தால் மணமக்களின் பெயரில் முதல் எழுத்து தங்கத்தினால் செய்யப்பட்டுள்ளது. அதன் ஓரத்தில் வரும் டிசைன்களும் தங்கத்தினால் செதுக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கே மினி கோவில் போன்று தோற்றம் அளிக்கும் இந்த பத்திரிக்கை ஒன்றின் விலை 1 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Read More

வெறும் ரூ.3,999-க்கு வெளியாகிறது அட்டகாச Smartphone!

June 19, 2018 0
முன்னணி மொபைல் நிறுவனமான பானாசோனிக் தனது அடுத்த வரவு P95- வினை இந்தியாவில் வெறும் ரூ .3999 வெளியிடப்பட்டது!

முன்னணி மொபைல் நிறுவனமான பானாசோனிக் தனது அடுத்த வரவு P95- வினை இந்தியாவில் வெறும் ரூ .3999 வெளியிடப்பட்டது!
1.3 GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் செயல்திறன் கொண்டிருக்கும் இந்த தொலைபேசி ஆனது 1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள் நினைவகத்துடன் வெளிப்படையாக காத்திருக்கிறது.
இந்த P95 ஆனது Android Nougat 7.1.2 மென்பொருள் மற்றும் 2,300 mAh பேட்டரி திறன் கொண்டது.
LED ஃப்ளாஷ் திறன் கொண்ட இந்த P95 ஆனது 8MP பின் கேமிரா மற்றும் 5MP முன் கேமிரா வசதிகளுடன் வெளிப்படுகிறது.
இதுகுறித்து நிறுவனத்தின் மேற்பார்வை தலைமை அதிகாரி பன்க் ரானா தெரிவிக்கையில் ... பிரத்தியேக வடிவமைப்புடன் வெளிவரும் இந்த மொபைல் ஆனது ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனைக்கு கிடைக்கும். வாடிக்கையாளர்கள் பலரது மனதை கொள்ளை கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் இந்த போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் மன வருத்தத்தை ஏதுமின்றி விருப்பத்தை நிரப்புவேற்றும் வகையில் தங்களது சேவை இருக்கிறது என்று அவர் உறுதி அளித்துவிட்டார்!
Read More

4000 ஜிபி இன்டெர்னல் மெமரி !! அதிர்ச்சி கொடுக்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் !!

June 19, 2018 0

 லெனோவா எச்டி 5 ஸ்மார்ட்போன் முதல் டீஸரில் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று அது நிறுவனத்தின் நிறுவன தலைவர் சாங் செங் வெய்போ போஸ்ட்-இல் தெரிவித்த நிலையில், இசட் 5 ஸ்மார்ட்போன் மற்றொரு அம்சம் புதிய டீசரில் அறிவித்திருக்கிறார்.
புதிய டீசரில் லெனோவா இசட் 5 ஸ்மார்ட்போன் உள்ள 4000 ஜிபி (4TB) இன்டர்னல் மெமரி வழங்கப்பட உள்ளது. இந்த இண்டெர்னல் மெமரி மூலம் ஸ்மார்ட்போன் 10 லட்சம் புகைப்படங்கள், 2000 HD திரைப்படங்கள் மற்றும் 1,50,000 பாடல்கள் சேமிக்க முடியும். இன்டர்னல் மெமரி தவிர புதிய ஸ்மார்ட்போன் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பும் தெரியவந்துள்ளது.

சமீபத்திய ஃப்ளக்ஷிப் ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 128 ஜிபி அல்லது 256 ஜிபி வரை இன்டர்நெட் மெமரி வழங்கப்படும் நிலையில், லெனோவா எச்டி 5 ஸ்மார்ட்போன் 4000 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமை பெறும் எதிர்பார்க்கப்படுகிறது.
4000 ஜிபி இன்டர்னல் மெமரி மட்டுமில்லாமல் புதிய ஸ்மார்ட்போன் சுமார் 95% அதிக ஸ்கிரீன்-டூ பாடி ரேசியோ கொண்டிருக்கும். அந்த வகையில் லெனோவா இசட் 5 ஸ்மார்ட்போன் முழுமையான ஸ்கிரீன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

லெனோவா இசட் 5 ஸ்மார்ட்போன் ஐபோன் X போன்ற நாட்ச் இடம்பெறலாம் என தோன்றும், புதிய ஸ்மார்ட்போன் நாட்ச் இருக்காது என கூறப்படுகிறது. ஸ்மார்ட்ஃபோனின் கீழ்பக்கம் உள்ள பெரிய பெசல்கள் அகற்றும் வழிமுறையை லெனோவா கண்டறிந்ததாக கூறப்படுகிறது.
ஐபோன் எக்ஸ் போலன்றி இல்லாமல் புதிய ஸ்மார்ட்போன் முனையம் செல்பி மற்றும் இயர்பீஸ் போன்றவை இடம்பெறவில்லை. அந்த வகையில் லெனோவா இசட் 5 ஸ்மார்ட்போன் பாப் அப் அப் செல்ஃபி கேமரா, ஆடியோ வைபரேஷன் மூலம் டிரான்ஸ்மிட் செய்யப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
Read More

Monday, 18 June 2018

வாட்ஸ்அப் பயனர்களுக்கு முக்கிய தகவல்: வருகிறது புதிய சேவை

June 18, 2018 0

சமூக வலைதளமாக வாட்ஸ்அப்பில் பணப்பட்டுவாடா சேவை இன்னும் சில வாரங்களில் அதிகாரப் பூர்வமான தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பணம் அனுப்பும் சேவையை சோதனை ரீதியில் வாட்ஸ்அப் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
10 லட்சம் வாடிக்கையாளர்களின் கடந்த சில மாதங்களாக சோதனை ரீதியில் இந்த திட்டம் செயல்படுத்தி வருகிறது. வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்புவது எளிமையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக இதனை பயன்படுத்தி வருவர்கள் தெரிவிப்பதாக வாட்ஸ்அப் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு மற்றும் தேசியப் பணப்பட்டுவாடா நிறுவனம் பல்வேறு வங்கிகளுடன் இணைந்து பணப்பட்டுவாடா சேவையை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்க உள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக வாட்ஸ்அப்பின் பணப்பட்டுவாடா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் வழங்க உள்ள புதிய சேவை ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு உட்பட்டுள்ளதா? என ஆராய தேசியப் பணப்பட்டுவாடா நிறுவனத்தை மத்திய அரசு பணித்துள்ளது.
Read More

Sunday, 17 June 2018

தரையிலிருந்து தேங்காக்கை பறிக்கும் புதிய முறை

June 17, 2018 0

தரையிலிருந்து தேங்காக்கை பறிக்கும் புதிய முறை


ஒரு ஆண் இருந்தால் போதும் 156 மரங்களில் தேங்காய் பரிக்கிறார் மற்றும் வெள்ளம் தயாரிக்கிறார்

Read More

உலக கோப்பை கால்பந்து: ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி வழங்கியது மெக்சிகோ ..!

June 17, 2018 0
உலக கோப்பை கால்பந்து போட்டியில் நடப்புச் சாம்பியனான ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சியளித்தது மெக்சிகோ அணி. முன்கள வீரர் லொசான்வோவின் சிறப்பான கோலால் மெக்சிகோ அணிக்கு வெற்றி கைகூடியது.
மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் நடைபெற்ற எஃப் பிரிவு போட்டியில் சர்வதேச தரநிலையில் முதலிடம் வகிக்கும் ஜேர்மனி அணி, 15-வது இடத்தில் மெக்சிகோ அணியை எதிர்த்து விளையாடியது. ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் ஜெர்மனி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார் மெக்சிகோ அணியின் 22-வயது முன்கள வீரர் ஹிர்விங் லொசானோ. ஹெர்னடெட்ஸ் கடத்திக் கொடுத்த பந்தை கோல்கீப்பர் மேனுவல் நுயரின் தடுப்பை தகர்த்து வலைக்குள் பாயச் செய்தார் லோசான்டோ. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் மெக்சிகோ அணி 1-0 என்ற கணக்கில் முன்னணிலை பெற்றது.


பின்னர் ஜேர்மனி அணி தாக்குதல் ஆட்டத்தில் மும்முரம் காட்டியது. ஆட்டத்தின் రెండవ பாதியில் ஜெர்மனி அணி கோல் அடிக்க பெரும் முயற்சிகள் எடுத்தது. பந்தும் ஜேர்மனிய அணியின் கட்டுப்பாட்டில் அதிகம் இருந்தது. ஆனால் ஜெர்மனி அணியின் கோல் முயற்சிகளை மெக்சிகோ வீரர்கள் நேர்த்தியாக முறியடித்தனர். விறுவிறுப்பு நிறைந்த போட்டியின் முடிவில் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1986 ஆம் ஆண்டுக்கு பின் உலக கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் ஜெர்மனி அணி வெற்றியை ஈட்ட தவறியது. ஜெர்மனிக்கு எதிராக போட்டியில் வெற்றி பெற்றது மெக்சிகோ அணி ரசிகர்கள், நிர்வாகிகளும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Read More

Saturday, 16 June 2018

மிக மெலிதான ஸ்மார்ட்போன்கள் இந்த லிஸ்டில் கொடுக்கப்பட்டுள்ளது

June 16, 2018 0
மிக மெலிதான ஸ்மார்ட்போன்கள் இந்த லிஸ்டில் கொடுக்கப்பட்டுள்ளது


நீங்கள் ஒரு ஸ்லிம் மற்றும் நேர்த்தியான லுக் கொண்ட ஸ்மார்ட்போன் விரும்புபவர்கள் என்றால், இந்த லிஸ்ட் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் ,, நங்கள இந்த லிஸ்டில் அது போன்ற சில ஸ்மார்ட்போன்களை தெர்ந்துதேடுத்துள்ளோம், உலகளவில் முதல் இடத்தை பிடித்த போன்களில் வருகிறது, நீங்கள் ஒரு மெல்லிய மற்றும் கவர்சிகரமான போன் வாங்க விரும்புகிரிர்கள் என்றால் இந்த லிஸ்டை கண்டிப்பாக ஒரு முறை பார ங்கள்
விவோ X5 மேக்ஸ்
இது உலகளவில் இருக்கும் மிகவும் மெல்லிய ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போனின் மொத்தம் 4.75 மிமீ உள்ளது. இந்த போனின் டிசைன் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் ஸ்டைலிசாக உள்ளது டுயல் சிம் சப்போர்ட் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் இன் புல் HD டிஸ்ப்ளே உள்ளது. இதில் 1.7 GHz. ஸ்னாப்ட்ரப்கான் உள்ளது இந்த டிவைஸில் 2GB ரேம் மற்றும் 16GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.
Oppo R5
Oppo R5 மொத்தம் (widh) 4.85 MM உள்ளது. அருமையான டிசைன் கொண்ட இந்த தொலைபேசியில் 5.2 இன்ச் புல் HD டிஸ்ப்ளே உள்ளது. இதில் 2GB RAM மற்றும் 16GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. 13MP பின் பின் கேமரா மற்றும் 5MP இன் முன் கேமரா நல்லாவே உள்ளது. இதில் ஸ்னட்ப்ளகன் 615 Octa core ப்ரோசெசர் உள்ளது
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் சில்வர் 5
இது முன்றும் இடத்தில் இருக்கும் அனைத்திலும் குறைந்த விலை பாமாக இருக்கும். மொத்தம் 5.1 MM உள்ளது. இது டிஸ்ப்ளே 4.8 இன்ச் உள்ளது. இதில் ஆண்ட்ரோயிட் 5.0.2 லலிபொப் இருக்கிறது. இந்த தொலைபேசி 8MP பின் மற்றும் 5MP முன் கேமரா உள்ளது. குவட் கோர் குவல்கம் ஸ்னட்ப்ட்ரப்கன் 410 ப்ரோசசர் இருக்கிறது. இதில் 2GB ரேம் மற்றும் 2000mAh இன் பேட்டரி உள்ளது.
ஜியோனி எலிஃப் S5.1
இது ஒரு மெல்லிய மற்றும் கவர்ச்சியான தொலைபேசி ஆகும். அதன் மொத்தம் குறைந்தபட்சம் 5.15 மி.மீ. இதில் 4.80 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே இருக்கிறது. இதில் 1.7 GHZ Octa-core மேடியாடக் MT6592 ப்ரோசெசர் இருக்கிறது. இதில் 1GB ரேம் மற்றும் 16GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 2050mAh இன் பேட்டரி உள்ளது. இதில் 8MP பின் பின் கேமரா மற்றும் 5MP யின் முன் கேமரா உள்ளது
Read More